பிரபல இயக்குனர் படத்தில் கமிட்டான கனாக்காணும் காலங்கள் சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சியில் நடித்த வெற்றிக்கு தற்போது முக்கிய இயக்குனருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கனாக்காணும் காலங்கள் நடிகர் வெற்றி

கனாக்காணும் காலங்கள் சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வந்தது. பள்ளி, கல்லூரிகள் என்று தனித்தனி எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்தது. கல்லூரி வாழ்க்கையும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது.  கார்த்திக், வெற்றி என பலர் மக்கள் மனதில் ஆழ்ந்த இடத்தை பெற்றனர்.

கனாக்காணும் சீரியல் முடிவடைந்த பிறகு அவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வெற்றிக்கு கிடைத்தது. ஆனால் அவருக்கு அந்த சீரியலில் அந்த அளவுக்கு பிரபலம் கிடைக்கவில்லை. அதனால் அந்த சீரியலை விட்டு அதிரடியாக விலகினார் வெற்றி. அதன் பிறகு அவர் சினிமாவில் தலைகாட்டவே இல்லை.

எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவும் இல்லை. கனாக்காணும் காலங்கள் ரீயூனியனில் தான் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பொழுது தான் என்ட்ரி கொடுத்தார். என்ட்ரி கொடுத்த சில நாட்களிலேயே அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here