ஏ ஆர் ரஹ்மான் பாடலுக்கு இசையமைக்கும் குக் வித் கோமாளி பிரபலம் …!வைரல் வீடியோ உள்ளே!!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவர் வீட்டின் செல்லப்பிள்ளையாக மனதை கவர்ந்தவர் ஷிவாங்கி. இந்நிலையில் தற்போது அவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் செட்டில் இசையமைக்கும் கார்த்திக் தேவராஜ் உடன் இணைந்து இசை வாசிக்கும் வீடியோவை  வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் மூலம் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார் ஷிவாங்கி. அங்கு தன்னுடைய வசீகரிக்கும்  குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். மேலும் அவர் பசங்க படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் தன் நகைச்சுவையாலும்  குறும்புத்தனத்தாலும் இடம் பிடித்தவர். மேலும் அங்கு அவர் செய்யும் குழந்தைத்தனமான சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைப்பது.

மேலும் அங்கு அவர் புகழ் மற்றும் அஸ்வின் உடன் செய்யும் லூட்டிகளுக்கு அளவில்லை. இந்நிலையில் இந்த குறும்புக்கார பெண் தற்போது சூப்பர் சிங்கர் செட்டில் கீபோர்டு வாசிக்கும் கார்த்திக் தேவராஜ் உடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் வரும் ‘எனோ வானிலை மாறுதே’ என்ற பாடலுக்கு இசை வாசிக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் அதோடு சேர்த்து இது எந்த பாடல் என கண்டுபிடிக்குமாறு ஒரு கேப்சன் உடன் பதிவிட்டு உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் அந்த பாடலின் வரிகள் மற்றும் படத்தின் பெயரை கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here