மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல சீரியல் – டாப் 4 லிஸ்ட் வைரல்!!

0

விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டாப் 4 சீரியல் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில்சீரியல்கள் அனைத்தும் டாப் ஹிட்டில் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மாவில் ஆரம்பித்து மௌன ராகம் சீரியல் வரை பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் சீரியல்கள் என்றாலே வெறுத்து வந்த பலரும் தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகத்தால் மக்களின் பெரும் பொழுதுபோக்காக இந்த சீரியல்கள் தான் இருந்து வருகிறது. சீரியல்கள் ஆரம்பத்தில் இருந்ததை போல மாமியார் மருமகள் சண்டை, அழுகை காட்சிகள் எதுவும் இடம் பெறாமல் வெள்ளித்திரையை போல கையாண்டு வருகின்றனர்.

அதாவது காதல் காட்சிகள், சண்டை காட்சிகள், திகில் என சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனாலேயே சீரியலுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. என்ன தான் பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆள் கிடையாது.

தற்போது பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மௌன ராகம் என பல ஹிட் சீரியல்களை விஜய் டிவி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் டாப் 4 சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அளவில் முதல் 4 இடத்தை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் சில நாட்களாக பின் தங்கியே இருந்தது. இதனால் பாக்கியலட்சுமி முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தை ராஜா ராணி 2 பெற்றுள்ளது. அதன் பின் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் பின்தங்கியதை நினைத்து பலரும் சோகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here