தன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நாகினி சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட போட்டோக்கள் இதோ!!!

0

நாகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் மௌனி ராய். இவர் தற்போது தன் ஆண் நண்பரை கட்டி பிடித்து நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் ‘எனக்கும் உங்கள மாதிரி ஒரு தோழி வேண்டும்’ என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சன் டிவியில் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட நாகினி சீரியலில் ஷிவானி கதாபாத்திரத்தில் நடித்த நாயகி மௌனி ராய்க்கு இந்திய அளவில் ரசிகர் கூட்டமே உள்ளது. இளசுகள் முதல் தாத்தாக்கள் வரை இவரை பார்க்கவே தினமும் 10 மணிக்கு டிவியின் முன்பு அமருவர். தற்போது இவர் சீரியலை விடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மௌனி ராய், நடனம், டப்பிங், படிப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான KGF படத்தில் யாஷ் உடன் சேர்ந்து இவர் போட்ட ஆட்டம் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. மகாயொத்த ராமன் என்ற அனிமேஷன் திரைப்படத்தில் சீதையின் கதாபாத்திரத்திற்கு மௌனி ராய் டப்பிங் பேசியிருக்கிறார். நடிப்பது போரடித்து விட்டால் புத்தகம் எழுத ஆரம்பித்து விடுவராம். இவ்வாறு நடிப்பு மட்டும் அல்லாமல் பல திறமைகளை பெற்று இருப்பவர் இவர்.

தற்போது தன் ஆண் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் ‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனேனில் நீ என்னுடைய நெருங்கிய நண்பராக கிடைத்துள்ளாய்’ என பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here