உங்க முடி கொத்து கொத்தா உதிருதா?? அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க!!

0
உங்க முடி கொத்து கொத்தா உதிருதா?? அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க!!
உங்க முடி கொத்து கொத்தா உதிருதா?? அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க!!

பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்க கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை தற்போது பார்ப்போம் வாங்க.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்;

  • ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்
  • கற்றாழை – 50 கிராம்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கி கொள்ளவும்.

இதன் பிறகு 1 கீற்று கற்றாழை சுத்தம் செய்து நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

தமிழக சுற்றுலா பயணிகளே உஷார்…, தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா…, போலீசில் பிடிபட்ட மர்ம நபர்!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து ஹேரை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here