ஐபிஎல்- லில் சொதப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ஷாருக் கான்!!

0

நேற்று நடத்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. தற்போது இதற்கு ஷாருகான் கொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மும்பை vs கொல்கத்தா:

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் முதல் போட்டியில் அசத்தல் வெற்றியை பதிவு செய்ததால் வெற்றியை தொடரும் எண்ணத்தில் கொல்கத்தா அணி களமிறங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mi
mi

நேற்றைய போட்டி கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் அனைவரையும் பதட்டத்தோடேயே இருக்க வைத்தது. காரணம் முதலில் பேட் செய்த மும்பை அணி 152 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மிக எளிதான இலக்காக இருப்பதால் இந்த போட்டியில் கொல்கத்தா அணி தனது வெற்றியை பதிவு செய்யும் என்று அனைவரும் நம்பினார்கள். காரணம் அந்த அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் செம பார்மில் உள்ளனர். மேலும் நேற்று முதல் 15 ஓவரில் கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

mi
mi

ஆனால் கடைசி 5 ஓவரில் மும்பை அணி மாயாஜாலம் செய்தது. ஏனெனில் முதலில் சொதப்பிய மும்பை அணி பந்துவீச்சாளர்கள் இறுதியில் கொல்கத்தா அணியினரை திணறடித்து வந்தனர். அசத்தலாக பந்துவீசிய ராகுல் சாஹர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் நம்பிக்கை நாயகர்கள் பும்ராஹ் மற்றும் போல்ட் மிக சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். கடைசி ஓவரில் போல்ட் எடுத்த 2 விக்கெட் மும்பை அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!

இறுதியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த முடிவு கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமும், மும்பை அணி ரசிகர்களுக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இதுகுறித்து கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். காரணம் இந்த போட்டி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி தனது மன்னிப்பை கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here