“அந்நியன்” திரைப்பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விக்ரம் நடித்து மிகவும் ஹிட் கொடுத்த “அந்நியன்” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் எடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங்கிடம் இயக்குனர் சங்கர் பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

“அந்நியன்” திரைப்படம்

தமிழில் மிகவும் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் தான், இயக்குனர் சங்கர். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு எடுத்த “அந்நியன்” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். இந்த திரைப்படம் இன்று வரை இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான பிரச்சனை ஆகும்.

சித்தி சீரியலில் இணைய இருக்கும் முக்கிய பிரபலம்?? யார் தெரியுமா??

இதனை அடுத்து இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படியாக இருக்க, இயக்குனர் சங்கர் தற்போது நடிகர் கமல் ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தினை இயக்கி வருகிறார். ஆனால், கமல் ஹாசன் தற்போது அரசியலில் களம் இறங்கி உள்ளதால் அந்த படம் தற்போது நிலுவையில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நடிகர் ராம் சரணை வைத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படியாக இருக்க, தமிழில் மெகா ஹிட் அடித்த “அந்நியன்” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கினை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here