சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!

0
srh vs rcb
srh vs rcb

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

பெங்களூர் vs ஐதராபாத்:

இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக ஐதராபாத் 10 முறையும் பெங்களூர் 7 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்கவில்லை. பெங்களூர் அணி இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த போட்டியில் பெங்களூர் அணியின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணி பைனல் வரை செல்லுமே தவிர கோப்பையை வெல்லாது. ஆனால் அந்த அணியில் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள். இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது.

srh vs rcb
srh vs rcb

முதல் போட்டியிலே இந்த அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளதால் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த தொடரை தோல்வியுடன் துவக்கியுள்ளது ஐதராபாத் அணி. இந்த அணியிலும் பெங்களூர் அணியை போல உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

srh vs rcb
srh vs rcb

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

வார்னர், நடராஜன், பேரிஸ்டோ போன்ற பல அதிரடி வீரர்கள் உள்ளனர். கடந்த போட்டியில் ஐதராபாத் அணியின் தோல்விக்கு அணியில் வில்லியம்சன் இல்லாதது என்று ரசிகர்கள் குறை கூறி வந்தனர். எனவே இந்த அணியில் வில்லியம்சன் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here