எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

0

இன்றைக்கு நோய்கள் அதிகரித்து கொண்டே செல்வதற்கு நம் பாரம்பரிய பழக்கங்களை மறந்து போனதும் ஒரு காரணமாகும். அந்த வகையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் என்பது இப்பொழுது தீபாவளிக்கு மட்டுமே என்ற நிலை ஆகிற்று. சாஸ்திரத்திற்கு என்று ஒரு ஸ்பூன் வைத்து குளிக்கிறார்கள். ஒரு பழமொழியே உண்டு “வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனிடம் கொடு” என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு பல நன்மைகள் நல்லெண்னையில் இருக்கிறன்றன.

எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நாம் வெளியே செல்லும் போது தலையில் ஏராளமான தூசுகள் படிகிறது. இதனால் தலையில் பொடுகு, அரிப்பு, முடி உதிர்வது போன்ற ஏராளமான பிரச்சனைகள் வருகின்றனர். முடி மிகவும் கொட்டுகிறது, வழுக்கை விழுவது போல் தெரிகிறது என்பவர்கள் வாரம் இரண்டு முறையாவது நல்லெண்ணெயை சூடுபடுத்தி வேர்களில் படுமாறு மசாஜ் செய்து சீகைக்காய் போட்டு குளித்தால் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

முகத்தில் தூசுக்கள் உள்ளே ஊடுருவுவது நம் கண்களுக்கு தெரிவதில்லை. நாம் சோப்களை பயன்படுத்துவதால் வெளியே உள்ள அழுக்குகள் போகுமே தவிர உள்ளேயுள்ள தூசுக்கள் போவதில்லை. அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளி தேவையற்ற மாசுக்கள் போன்றவை நீங்கி முகம் வசீகரமாக தோற்றம் அளிக்கும்.

வயிற்று பகுதியில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் உள்ளேயுள்ள உறுப்புகள் சுத்தமாகிறது. நம் உடம்பில் எண்ணெய் பசை இருந்தால் தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி கதிர்கள் உள்ளே செல்ல முடியும். தொப்புளில் உறங்க செல்லும்முன் எண்ணெய் வைத்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி வராது.

முட்டி மற்றும் கால் வலியால் அவதிபடுபவர்கள் நல்லெண்ணையில், பூண்டு சேர்த்து காய்ச்சி மிதமான சூட்டில் தேய்த்தால் வலி இருக்காது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலிலுள்ள சூடு வெளியேறுகிறது. இதனால், நம் உடல் முழுவதும் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைக்கு சீகைக்காயும், உடலிற்கு பாசி பயறுமாவும் போட்டு குளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here