பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.., ஷாக்கில் சின்னத்திரை!!

0
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.., ஷாக்கில் சின்னத்திரை!!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.., ஷாக்கில் சின்னத்திரை!!

சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் மனைவி சிகிச்சை பலனின்றி உயிர் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பரத் கல்யாண்:

தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பரத் கல்யாண். தற்போது கனாக்காணும் காலங்கள், பாரதி கண்ணம்மா, தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் இவருடைய ஆசை மனைவி பிரியதர்ஷினி இறந்து விட்டதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிரியதர்ஷினி உடல் பருமனை குறைப்பதற்கு பேலியோ டயட்டை பின்பற்றியுள்ளார். இதனால் அவருக்கு முன்னால் இருந்த சர்க்கரை நோயின் வீரியம் தீவிரமடைந்தது. இதை கட்டுப்படுத்துவதற்கு சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் நீரிழிவு நோயால் அவர் படு மோசமான சூழ்நிலைக்கு ஆளாகி கோமாக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அனைத்து சினிமா துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மறைந்த பிரியாவின் உடலை நாளை காலை நல்லடக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here