மீண்டும் தலையெடுக்கும் பறவை காய்ச்சல்.,, 13.3 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிப்பு!!

0
மீண்டும் தலையெடுக்கும் பறவை காய்ச்சல்.,, 13.3 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிப்பு!!
மீண்டும் தலையெடுக்கும் பறவை காய்ச்சல்.,, 13.3 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிப்பு!!

அயோவா மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பறவைக் காய்ச்சல்:

கொரோனா வருகையை தொடர்ந்து, பறவை காய்ச்சல் நோய் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதாவது பறவைகளைத் தாக்கும் இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த, அண்மையில் கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் வாத்துகள், கோழிகள், முட்டைகள், பறவைகள் என அனைத்தும் கொல்லப்பட்டன. இதே போல் அமெரிக்காவின் அயோவா பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஏராளமான கோழிகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அழிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த நோய் தொற்று அயோவா பகுதியை மீண்டும் உலுக்கி வருகிறது. அதாவது இது குறித்து அயோவா விவசாய அதிகாரிகள் நேற்று கூறியது, பறவை காய்ச்சலால் நடப்பு ஆண்டு 15 வணிகப் பண்ணைகளில் உள்ள வான் கோழிகள், முட்டையிடும் கோழிகள், பிற கோழிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு 13.3 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பம் – இந்த மாதத்திற்கான பொருட்கள் கட்? அரசின் விளக்கத்தால் பயனர்கள் ஷாக்!!

இதனால் கடும் பாதிப்பை அயோவா மாகாணம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் மாநிலத்தில் மற்றொரு கோழி பண்ணை, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த மாகாணத்தில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here