
தமிழ் சினிமாவில் ”இருட்டறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வந்தார். இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.இந்த நேரத்தில் இவர் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது இவர் மீது செங்கல்பட்டு நீதிமன்றம் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இதற்கான காரணம், இவர் ஒரு வருடத்திற்கு முன் காரில் இவரது நண்பர்களுடன் சென்னை கடற்கரை சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த செய்தி நம் அனைவரையும் வேதனையில் தள்ளியது. அந்த சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் யாஷிகா மீண்டு வந்தார். ஆனால் யாஷிகா காரை வேகமாக ஓட்டி வந்தது தான் அவரது தோழி மரணத்திற்கு காரணம் என்பதால் அவர் மீது 3 பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவரை ஆஜராகும்படி கூறியுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாஷிகா அவமதித்துள்ளார். இதனால் தான் இவர் மீது பிடிவாரண்ட்டை செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.