செம்பருத்தி “ஹேர்மாஸ்க் அண்ட் ஹேர் கண்டிஷ்னர்” சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0

நம் வீடுகளில் கிடைக்க கூடிய செம்பருத்தியை வைத்து எப்படி நம் கூந்தலை பராமரிப்பது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுதல், தலையில் அரிப்பு, பொடுகு, பேன், புழுவெட்டு, இரட்டை பிளவு போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் செம்பருத்தி ஒரு தீர்வாக இருக்கிறது.

செம்பருத்தியின் நன்மைகள்:

செம்பருத்தியில் பல நன்மைகள் இருக்கிறது. செம்பருத்தியை டீ தயார் செய்து குடித்தால் முடி நன்றாக வளரும். சருமம் அழகாக இருக்கும். தாம்பத்திய உறவிலுள்ள பிரச்சனைகள் தீரும். இதயநோய் உள்ளவர்கள் தினமும் 4 செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டால் நாளடைவில் சரியாகிவிடும். மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் செம்பருத்தி பூவை உலர்த்தி பொடியாக வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து கஷாயம் அல்லது டீ செய்து குடித்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

செம்பருத்தி ஹேர்மாஸ்க்:

செம்பருத்தி இலை மற்றும் பூவின் இதழ்களை எடுத்து அரைக்க வேண்டும். தனியாக ஊறவைத்த வெந்தயம் மற்றும் தயிரை சேர்த்து அரைத்து, ஒரு எலுமிட்சை பழச்சாறு பிழிந்து மூன்றையும் நன்றாக கலக்கி தலையின் அனைத்து பாகங்களிலும் நன்றாக தேய்க்க வேண்டும். எந்தவொரு, ஹேர்மாஸ்க் போடும் போதும் தலையில் எண்ணெய் பசை இருக்க கூடாது. ஹேர்மாஸ்க் தலையில் தேய்த்த பின்னர் ஹேர் கவர் போட்டு முடியை கட்ட வேண்டும்.

இல்லையெனில், முடி வறட்சியாகவே காணப்படும். 45 நிமிடம் கழித்து ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் முடியை அலச வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தலே போதும் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். வெந்தயம் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. அதனால், உடல் சூடு தணிந்து முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

செம்பருத்தி ஹேர் கண்டிஷ்னர் :

முடி பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல வகையான ஹேர் கண்டிஷ்னர்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டிலேயே சுலபமாக செம்பருத்தி இலை மற்றும் பூவை வைத்து ஹேர் கண்டிஷ்னர் தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவு இலை மற்றும் செம்பருத்தி பூ 5 எடுத்து ஒரு டம்ளர் 15 நிமிடம் ஊற வைத்தபின் கைகளால் நன்றாக பிசைந்தால் ஷாம்பு போன்று நுரைநுரையாக வரும்.

அதனை தலையில் தேய்த்து குளித்தால் முடி ஒன்றோடு ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கு பட்டு போல் கருமையாகவும் , முடியின் வறட்சித்தன்மை நீங்கி ஹேர் கண்டிஷ்னர் பயன்படுத்தியது போல் அழகாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here