வித்தியாசமான ‘ஜவ்வரிசி வடை’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

தீபாவளி பண்டிகை என்றாலே எல்லோரும் வீட்டில் பலகாரம் தாங்க செய்வோம். நமக்கு ஜவ்வரிசை என்றாலே பாயாசம் தாங்க நியாபகம் வரும். அதான் வீட்டியில் இருக்கும் அனைவருக்கும் செஞ்சு கொடுப்போம். ஆனால் இப்ப ஜவ்வரிசை கொண்டு வடை செய்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் அளவுக்கு ஜவ்வரிசை வடை எப்படி செய்றதுன்னு தாங்க பார்க்க போறம்.

தேவையான பொருள்கள்

ஜவ்வரிசை – 3 கப்

உருளைக்கிழங்க – 3

வறுத்த வேர்கடலை – 1 கப்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – 2 சிறிய அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)

செய்முறை

முதலில் ஜவ்வரிசியை எடுத்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3-4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வறுத்த வேர்க்கடைலையை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு போட்டு வேகவைத்து நன்றாக வெந்ததும் எடுத்து உரித்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு ஒரு பாத்திரத்தில் நாம் ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து அதில் நாம் உரித்து வைத்த உருளைக்கிழங்கு இரண்டும் சேர்த்து மசித்து கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல பிசைந்து கொள்ள வேண்டும். கையில் ஒட்டாத அளவுக்கு பிரட்டி கொள்ளவேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தண்ணீர் அதிகமாக இருந்தால் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து பிரட்டி கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஜவ்வரசி வடை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here