இருதார தோஷம் யாருக்கு?? பரிகாரங்கள் என்னென்ன?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
இரண்டு தார தோஷம்
இரண்டு தார தோஷம்

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகும். ஆனால் சிலருக்கு திருமணமாகவில்லை என கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி இருக்க சிலருக்கு இரண்டு தாரங்கள் அமைவதுண்டு. எந்த ஜாதகக்காரர்களுக்கு இரண்டு தாரங்கள் அமையும் மற்றும் அதற்கு என்ன பரிகாரங்கள் என்று பார்க்கலாம் வாங்க.

இருதார தோஷம்

தற்போது உள்ள தலைமுறையில் காதல் என்பது அறியாத பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. இது நமது ஜாதகத்தில் உள்ள தசா பத்திகளை பொறுத்தே அமைகிறது.  திருமணமும் அப்படி தான். கருத்துவேறுபாடு என கூறி சுலபமாக பிரிந்து விடுகின்றனர். மேலும் இந்த தலைமுறையில் இருதாரம் என்பதை விட பலதாரம் என்பது வழக்கமாகி வருகிறது. யாருக்கெல்லாம் இருதாரம் அமையும் என பார்க்கலாம்.

இரு தாரம் யாருக்கு??

ஒரு ஜாதகரின் ராசிக்கட்டத்தில் சுக்கிரன் வலுவிழந்திருந்தால் அவருக்கு இருதாரம் ஏற்படும். அதாவது பகைவீட்டிலோ, கன்னி ராசியிலோ அல்லது 8 ஆம் வீட்டிலோ சுக்ரன் அமர்ந்திருந்தால் அவர் தனது பலத்தை இழக்கிறார். இதனால் அந்த ஜாதகருக்கு இருதார தோஷம் ஏற்படுகிறது.

Raasi-kattam
Raasi-kattam

ராசிக்கட்டத்தில் 3ஆம் இடம் என்பது மிக முக்கியமாகும். அது வலு பெற்றிருக்க வேண்டும். திருமண ஸ்தானமான 7வது இடம் பலவீனமடைந்து 11 வது வீடு வலிமை பெற்றால் அவருக்கு இரண்டு திருமணம் நடைபெறும்.

பரிகாரங்கள்

இருதார தோஷத்தை நீக்க வாழைமரத்திற்கு தாலி கட்டி அதனை வெட்டுவார்கள். இது நாம் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகிறோம். இதனை தவிர்த்து சில பரிகாரங்கள் உள்ளன.

temple
temple

அதாவது ஸ்ரீ ராமனின் உருவப்படத்தை வைத்து தினமும் வழிபட்டு வந்தால் இருதார தோஷம் நீங்கும். திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் தோஷம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here