Thursday, March 28, 2024

ஒரு லிட்டர் பெட்ரோல் 20 ரூபாய் மட்டுமே – விரைவில் அறிமுகம்!!

Must Read

கேரளாவை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவர் மூலிகை பொருட்களை கொண்டு புதிய வகையான பெட்ரோலை அறிமுகப்படுத்த உள்ளார், அதன் விலை ஒரு லிட்டர் 39 ரூபாய் மட்டும் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய வகை பெட்ரோல்:

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உச்சத்தை அடைந்து வருகின்றது. இதனால் மக்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு தீர்வாக விவசாய கழிவுகள், மூலிகை பொருட்கள் மற்றும் கழிவு நீர் கொண்டு புதிய வகை பெட்ரோல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவர். பெட்ரோல் மட்டுமன்றி டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றையும் தயாரித்துள்ளார்.

10 ஆம் தேதி முதல் தயாரிப்பு:

இவரது தயாரிப்புகள் குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது “இந்த புதிய வகை பயோ பெட்ரோல், பயோ டீசல் மற்றும் பயோ எரிவாயு சுற்றுசூழலுக்கு ஏற்றது. இந்த தயாரிப்புகளை நான் உற்பத்தி செய்வதற்காக கேரளா அரசு 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. உற்பத்தியை துவங்கவும் அனுமதி அளித்துள்ளது.”

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

herbal fuel producer ramarpillai
herbal fuel producer ramarpillai

“இதனால் வரும் செப்டம்பர் 10 முதல் உற்பத்தியை துவங்க உள்ளோம். கேரளாவில் மட்டும் 77 இடங்களில் உற்பத்தியை துவங்க உள்ளோம். தமிழக அரசிடமும் அனுமதி கேட்க உள்ளேன். அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தில் பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசலை 20 ரூபாய்க்கு தர உள்ளோம், கேரளாவில் வரியுடன் சேர்த்து 39 ரூபாய்க்கு தர உள்ளோம். மேலும் பயோ எரிவாயு 16 லிட்டரை 250 ரூபாய்க்கு தர உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி., தேர்தல் பணியில் இருந்து விலக்கு? கர்நாடகாவில் வெளியான தகவல்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -