தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு – உற்சாகத்தில் மாணவர்கள்!!

0
மாணவர்களே அலர்ட்.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
மாணவர்களே அலர்ட்.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 10 மாதங்களுக்கு பிறகு 9 மட்டும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கியுள்ளன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. நோயின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ஆரம்பித்தது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை – இன்றைய நிலவரம்!!

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 19 ம் தேதி அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பித்தது. மற்ற பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை இன்று முதல் நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் 9 மட்டும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் வகுப்புகள்

தொடர்ந்து அரசு காட்டிய வழிமுறைகளின் படி கல்லூரிகளில் 6 நாட்கள் பாடங்களை நடத்தலாம் என்ற நிலையில், மாணவர்களுக்கான பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. என்றாலும் சில கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையே தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளிகளில் மாணவர்கள் வருகையைப் பொறுத்து, பாடங்கள் மற்றும் பிரிவுகளை ஒரு நாள் விட்டு செயல்படுத்தலாம் எனவும், காலை மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகளை ஷிப்ட் முறையில் செயல்படுத்தலாம் எனவும் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதனால் அதிக எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரக்கூடிய பள்ளிகளில் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here