#INDvsENG டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தற்போது 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரூட் 218, சிப்லே 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்களை குவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்திய அணி தரப்பில் பும்ராஹ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களையும் இஷாந்த் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். அதன்பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி வருகின்றனர். துவக்க ஆட்டக்காரர் ரோஹித் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார்.

காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வரும் சசிகலா – போலீசார் குவிப்பு!!

திணறும் இந்தியா:

அதன்பின்பு கில் 29, விராட் கோஹ்லி 11, ரஹானே 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா மற்றும் பாண்ட் அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தனர். சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த பாண்ட் 91 மற்றும் புஜாரா 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பெஸ் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். களத்தில் தற்போது சுந்தர் மற்றும் அஸ்வின் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 285/6

சுந்தர் – 53*
அஸ்வின் – 16*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here