பப்ஜி விளையாட ரூ.3 லட்சம் கேட்ட பள்ளி மாணவன் – பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மொபைலில் PUBG விளையாட தனது பெற்றோரிடம் ரூ.3 லட்சம் ரூபாய் கேட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவன், பணத்தை தர பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் தற்கொலை:

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்நாட்டு நிறுவன டெண்டர்கள், இறக்குமதி போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி சீன நிறுவனங்களுக்கு சொந்தமான டிக்டாக், பப்ஜி உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக இந்த செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

pubg

இந்திய இளைஞர்கள் அதிகளவு நேரத்தை வீணடித்த பப்ஜி செயலி தடை செய்யப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனால் பல தற்கொலை சம்பவங்களும் நடைபெற்றன. மறுபுறம் சிலர் இதற்கு மாற்று வழியை யோசித்து பப்ஜி விளையாட்டின் கொரியா, மலேஷியா போன்ற வெர்சன்களை டவுன்லோட் செய்து விளையாட தொடங்கினர். இந்த விளையாட்டிற்காக விலை உயர்ந்த மொபைல் போன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு தலை காதலால் டிக் டாக் பிரபலம் ஜி .பி. முத்து தற்கொலை முயற்சி – ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்நிலையில் திருப்பதி அருகே PTR நகரை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவன் தேஜோஸ் என்பவர் PUBG விளையாடுவதற்காக பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். ஒரு கேமிற்கு எப்படி 3 லட்ச ரூபாய் செலவு செய்வது என பெற்றோர் தர மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் அந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here