Saturday, May 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள் – சில துளிகள்!!

Must Read

தேசிய செய்திகள்:
  • இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் ராமர் கோவிலுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்:
  • இந்த மாதம் இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் சிறப்பு பேருந்துகள் நகரங்களுக்கு செல்ல இயக்கப்படுமா?? என்று பயணியர் எதிர்பார்க்கின்றனர். பயணியரின் ஆர்வத்தை பொறுத்து தான் பேருந்துகள் இயக்கபடும் என்று பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
  • தமிழகத்தில் கூடிய விரைவில் திரை அரங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வருடன் ஆலோசனையும் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
வர்த்தக செய்திகள்:
  • நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்த சேவை ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மிகப்பெரிய தொகையை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடன் செல்லுவதற்கான கால அவகாசத்தை 6 மதத்திற்கு மேல் நீடிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள கடன் தொகைகளுக்கு மட்டுமே EMI தொகை ஒத்திவைப்பு காலம் முடிந்த பிறகு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
  • இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து ரூ.39,048 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 31 ரூபாய் உயர்ந்து ரூ.4,881 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.67.70 என்ற விலை நிலவரத்தில் விற்கப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை ரிப்போர்ட்:

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்:

கொரோனா வைரஸ் தொற்றுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை யாருக்கும் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விச் செய்திகள்:
  • தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி 40 வயது கடந்திருந்தால் பணியில் நியமிக்கபட மாட்டார்கள் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளுக்கு உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு இந்த வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.
  • அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 29ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மாணவர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு செய்திகள்:
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் U19 கிரிக்கெட் வீரர் சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐ.பி.எல் 2020 தொடரில் நன்றாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஐந்து வயது மகளான ஜியாவிற்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -