Monday, May 13, 2024

தமிழகத்தில் விரைவில் தியேட்டர்கள் திறப்பு?? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!!

Must Read

மத்திய அரசு திரைஅரங்குகளை திறப்பதற்கு அனுமதி கொடுத்துள்ள போதிலும் தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. திரை அரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், கோவில்கள், திரை அரங்குகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. தற்போது 5 ஆம் கட்ட பொது முடக்கம் பின்பற்று வருகின்றது. இதில் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் திரையரங்குகளை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Delhi Unlock 5 guidelines: Movie theatres to reopen with 50% seating from October 15 - Cities Newsஆனால், திரையரங்குகள் திறப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. தமிழக அரசு தற்போது வரை தியேட்டர்கள் திறப்பு பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் அறிவிக்கவில்லை. திரை அரங்குகள் திறப்பு குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் “மத்திய அரசு திரை அரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை குறித்து தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசித்தோம். துறைரீதியாக ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.”

விரைவில் திறப்பு:

“மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். திரை அரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வரிடம் ஆலோசித்துள்ளோம். விரைவில் தியேட்டர்களை திறக்க முதலவர் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -