மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை 2 – இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்??

0

விஜய் டிவியில் தற்போது சுவாரசியமான பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது இதனால் விஜய் டிவியின் டிஆர்பி தற்போது டாப் ரேஞ்சில் போய்க்கொண்டுள்ளது. மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பைனலில் எந்த ஜோடி வெற்றி பெறுவர்? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ்

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போன சீசன் கூட இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த சீசனில் காமெடி நடிகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

mr and mrs chinnathirai
mr and mrs chinnathirai

இதில் கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் அவர்களும் நிஷாவும் தொகுத்து வழங்குகின்றனர். இது வரையிலும் ரீல் ஜோடியாக சீரியலில் நடித்து வந்தவர்கள் ரியல் ஜோடியாக களமிறங்கி இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

mr and mrs chinnathirai
mr and mrs chinnathirai

எனவே தான் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சீசன் 2 இல் சத்யா – ரம்யா, சையத் அன்வர் – சமீரா, பழனி – சங்கீதா, குமரன் – சுஹாசினி, ரகு – தப்பா, வினோத் பாபு – சிந்து, டிஎஸ்கே – வைஷ்ணவி, மூக்குத்தி முருகன் – கிருஷ்ணவேணி, பிரபாகரன் – அஞ்சலி ஆகிய ஜோடிகள் கலந்து கொண்டனர். தற்போது அவர்களில் இருந்து குமரன் – சுஹாசினி, டிஎஸ்கே – வைஷ்ணவி, வினோத் பாபு – சிந்து, ராமர் – கிருஷ்ணவேணி, ரகு – தப்பா போன்றோர் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளனர்.

mr and mrs chinnathirai
mr and mrs chinnathirai

இதிலிருந்து யார் டைட்டிலை கைப்பற்றுவார்? என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தற்போது இந்த ஜோடிகளின் குமரன் – சுஹாசினி மற்றும் வினோத் பாபு – சிந்து இவர்கள் இருவரில் யரேனும் ஒருவர் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் இருந்து அனைத்து டாஸ்குகளிலும் ஒழுங்காக பங்கேற்று வெற்றிகளையும் பெற்றுள்ளனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் குமரன் – சுஹாசினி பக்கம் அதிக ஆதரவை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here