400 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர பேரிணைவு – வானில் சுடர் விட்ட பெரிய நட்சத்திரம்!!

0

சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு சனி & வியாழன் கோள்கள் அருகருகே நெருங்கி வந்த அரிய நிகழ்வு நேற்று மாலை நிகழ்ந்தது. இதை ஏராளமானோர் கண்டு களித்தனர். சனியும், வியாழனும் சுமார் 20 வருடங்களுக்கு ஒரு முறை அருகருகே நெருங்கி வரும். எனினும் இந்த அறிய நிகழ்வை சுமார் 400 வருடங்களுக்கு ஒரு முறை தான் நம்மால் பூமியிலிருந்து காண முடியும். அப்படிப்பட்ட ஒரு அரிய நிகழ்வு நேற்று (டிசம்பர் 21) மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நட்சத்திரங்கள் இரண்டும் அருகருகே இருப்பதாக தோன்றினாலும், அவற்றிற்கிடையே லட்சக்கணக்கான மைல் தூரம் இருக்கும் என்பதே உண்மை.இந்நிகழ்வு கடைசியாக 1623ம் வருடம் நிகழ்ந்த போதிலும் அதை பூமியிலிருந்தது தெளிவாக காண முடியவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று இந்த நட்சத்திர பேரிணைவு வானில் ஒரு பெரிய நட்சத்திரம் போல பிரகாசமாக சுடர் விட்டது.

முன்னதாக இதுபற்றி தெரிவித்திருந்த கொடைக்கானல் வானியற்பியல் மைய விஞ்ஞானி எபிநேசர் “இந்நிகழ்வை மேற்கு திசையில் வெறும் கண்களாலேயே காணலாம். 21ம் தேதி மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை தோலை நோக்கி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.

#IND vs AUS இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ‘நோ ஹிட்மேன்’ !!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்ய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவரும் இந்த நட்சத்திர பேரிணைவை கண்டுகளித்தனர்.

கிறிஸ்துமஸ் மாதத்தில் நிகழ்ந்த இந்த நட்சத்திர இணைவின் மூலம் வானில் தெரிந்த பெரிய நட்சத்திரத்தை, கிறிஸ்துமஸ் நட்சத்திரமாகவே கிறிஸ்துவ மக்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here