#IND vs AUS இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ‘நோ ஹிட்மேன்’ – பிசிசிஐ அதிரடி முடிவு!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஹிட் மேன் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க சென்றுள்ளது. தற்போது ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வைத்து நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு தனது வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது.

ஹிட்மேனுக்கு வாய்ப்பில்லை:

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்திரேலிய சுற்றுக்கு அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் இவர் தனது உடற்தகுதியை நிரூபித்தால் ஆஸ்திரேலியாவிற்கு செல்லலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். அதன்பின் பெங்களுருவில் நடந்த பிட்னஸ் டெஸ்டில் ரோஹித் சர்மா தனது பிட்னெஸை நிரூபித்து அசத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு அவர் தனியாக ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் வந்து சேர்ந்தார். ஆஸ்திரேலியா வந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அதனால் இவரால் வலை பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை. தனது அறையை விட்டு வெளிய வர முடியாமல் தவித்து வருகிறார்.

தற்போது இதனை குறிப்பிட்ட பிசிசிஐ, ரோஹித் ஷர்மாவிற்கு பயிற்சி நிறைய தேவை. அவர் வலை பயிற்சி அதிகமாக மேற்கொண்டால் மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்று அதிரடியாக கூறியுள்ளது. மேலும் அவருக்கு இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பளிக்கவில்லை.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதி!!

அவர் முன்றாவது போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லாதது போல் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலை களம் இறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here