IPL 2024 : கடைசி பந்து திரில்லர்.. 2 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!!

0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 56 பந்துகளில் (109 ரன்கள்) சதம் விளாசி அசத்தினார்.

இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியில் களம் இறங்கிய வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 1 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் பட்லர் 1 ரன் அடிக்க அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here