படு மாஸ் ஹிட்டை கொடுக்க காத்திருக்கும் சர்தார் திரைப்படம் – கூடிய விரைவில் டீஸர், ஃபர்ஸ்ட் லுக்!!!

0
படு மாஸ் ஹிட்டை கொடுக்க காத்திருக்கும் சர்தார் திரைப்படம் - கூடிய விரைவில் டீஸர், ஃபர்ஸ்ட் லுக்!!!
படு மாஸ் ஹிட்டை கொடுக்க காத்திருக்கும் சர்தார் திரைப்படம் - கூடிய விரைவில் டீஸர், ஃபர்ஸ்ட் லுக்!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், கூடிய விரைவில் சர்தார் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சர்தார்

கார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து படு ஹிட்டை கொடுத்து வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என்கிற திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிக்கும் சர்தார் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திரைப்படத்தில் புதிதாக போலீஸ் கெட்டப்பிலும் வயதான தோற்றத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

Karthi sporting two different looks in Sardar

புதுவிதமான தோற்றம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சர்தார் திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் கூடிய விரைவில் வெளியாகும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here