சனிப்பெயர்ச்சி 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்? பரிகாரங்கள் என்னென்ன??

1

இந்த வருடம் வரப்போகும் சனிப்பெயர்ச்சி எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு இடம்பெயர்கிறார், யாருக்கு எந்த சனி பிடித்துள்ளது, எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் எந்த ரசிகர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை வாக்கிய பஞ்சகப்படி கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

சனிப்பெயர்ச்சி

இந்த 2020ம் வருடம் ஆரம்பித்தது தெரியவில்லை ஆனால் அதற்குள் முடியப்போகிறது. இந்த வருடம் அனைவருக்கும் பிடித்திருக்காது என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, எல்லா ராசிக்காரர்களுக்கும் அவர்களது ராசிக்கு ஏற்ற வகையில் சனி பகவான், குரு பகவான், கேது, ராகு என 9 நவகிரகங்களும் அவர்களது பலனை தருகின்றன.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி வருடம் மார்கழி மாதம் 11ம் நாள் 27.12.2020யில் அதிகாலை 5.22க்கு சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசியில் குரு பகவானுடன் இருந்தாலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருவும் சனியும் மகரம் ராசியில் கூட்டணி அமைப்பதால் உலகத்திற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பலருக்கும் வரலாம்.ஆனால் பயப்பட தேவையில்லை நாம் 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சனிப்பெயர்ச்சியில் சனி சஞ்சரிக்கும் இடத்தை வைத்தும், சனியின் பார்வை படும் இடங்களை வைத்தும் பலன் கூறலாம். ஒவ்வொரு ராசிக்கும் எந்தெந்த சனி நடக்கிறது என்று பார்ப்போம்.

மகர ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனியால் மகரம், மேஷம், கடகம், துலாம் ராசிக்காரர்களுக்கு சச மகா யோகம் கிடைக்கிறது. தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனி காலமாகும். மேஷம் ராசிக்கு கரும சனி அல்லது தொழில் சனி, ரிஷபம் ராசிக்கு பாக்ய சனி, மிதுனம் ராசிக்கு அஷ்டம சனி, கடக ராசிக்கு கண்டச்சனி, சிம்ம ராசிக்கு ருண ரோக சத்ரு சனி, கன்னி ராசிக்கு பூர்வ புண்ணிய சனி, துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சிக ராசிக்கு தைரிய சனி, தனுசு ராசிக்கு குடும்ப சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, கும்பம் ராசிக்கு விரைய சனி, மீனம் ராசிக்கு லாப சனியாகும்.

சனி நன்மை தரும் ராசிகள்: ரிஷபம் – கன்னி – சிம்மம் – விருச்சிகம்
நன்மை, தீமை இரண்டும் பெரும் ராசிகள் : மேஷம் – மீனம்
பலன் பெரும் ராசிகள் – மிதுனம் – கடகம் – துலாம் – தனுசு – மகரம் – கும்பம்

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை: மேஷம் – நீசம், ரிஷபம் – நட்பு, மிதுனம் – நட்பு, கடகம் – பகை, சிம்மம் – பகை, கன்னி – நட்பு, துலாம் – உச்சம், விருச்சிகம் – பகை, தனுசு – நட்பு, மகரம் – ஆட்சி, கும்பம் – ஆட்சி, மீனம் – நட்பு.

நவக்கிரககளுடன் சனியின் நிலை: சூரியன் – பகை, சந்திரன் – பகை, செவ்வாய் – பகை, புதன் – நட்பு, குரு – சமம், சுக்கிரன் – நட்பு.

பரிகாரங்கள்:

தினமும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது.
தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பது.
முன்னோர்கள் வழிபாட்டை அமாவாசையில் செய்வது.
வீட்டில் ஹோமங்கள் நடத்துவது போன்றவை சனியின் பார்வையை மாற்றி அமைத்து தரும்.
சனியின் காயத்திரி மந்திரம், சனியின் ஸ்லோகம் பாடுவது நன்மையை தரும். திருநள்ளாறு சென்று வருவது மிகவும் சிறப்பு.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here