சினிமாவில் களமிறங்கும் அருண் விஜயின் மகன் – கோலிவுட்டின் அடுத்த நட்சத்திரம்!!

0

நடிகர் விஜயகுமாரின் பேரனும், அருண் விஜயின் மகனுமாகிய அர்னவ் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அறிமுகம் ஆகிறார். இதை குறித்து அருண் விஜய் மற்றும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் ஆரம்பம் தொட்டே சமூக அக்கறை கொண்ட மற்றும் பெண்கள், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது.

குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்தை புதிய அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்குனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜயின் மகனுமாகிய அர்னவ் இந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமாக இருந்தாலும் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்ரா தற்கொலைக்கு முன் என்ன பேசினார்??

ஒரு சிறுவனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்கும் இடையிலான பாசம் தான் திரைப்படத்தின் கதையாக இருக்கும். இந்த படத்தில் அவரது மகனுடன் அருண் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் வர இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில்,”அடுத்தடுத்த தலைமுறைகள் சினிமாவில் நுழைவது சந்தோஷமாக உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here