MS தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

இந்திய அணியின் கேப்டன் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வழக்கு இன்னும் போய் கொண்டிருக்கிறது. தற்போது அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படம்:

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக விளங்கியவர் எம்.எஸ்.தோனி. இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவரின் பல சாதனைகள் இன்னும் முறியடிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இயக்கி வெளியிட்டனர். இந்த படத்தில் சுஷாந்த் சிங் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது நடிப்பு தோனி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் சுஷாந்த் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்றார். கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் சுஷாந்த் சிங் தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகமே அதிர்ந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு நண்பராக நடித்திருந்த மற்றொரு நடிகரும் தற்கொலை செய்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அந்த படத்தில் சுஷாந்திற்கு நண்பராக சந்தீப் நஹார் நடித்திருந்தார். அவர் தற்போது தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தனது தற்கொலைக்கு முன்பாக சந்தீப் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனது மனைவிக்கும் தனக்கும் நடத்த பிரச்சனைகளால் நான் மிகவும் மனம் நொந்து உள்ளேன். சிறு விசயத்திற்கு கூட பெரிதாக சண்டை போடுகிறார். இதனால் என் வாழ்க்கையை முடிக்கும் நிலை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here