பாஸ்டேக் வசூல் முறை இன்று முதல் அமல் – தவறினால் இருமடங்கு கட்டணம்!!

0

சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 16ம் தேதி முதல் வரும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணமுறை அவசியம் என் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளது.

நடைமுறைக்கு வந்த பாஸ்டேக்

சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 16ம் தேதியான இன்று முதல் பாஸ்டேக் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பாஸ்டேக் பேட்ஜ்ஜை பெறுவதற்கு விற்பனை மையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் பயணம் செய்வதற்காக, பாஸ்டேக் திட்டம் துவங்கப்பட்டது. இதன்படி பாஸ்டேக் பேட்ஜ்ஜை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சுங்கச்சாவடியை கடக்கும் போது தானியங்கி முறையின் மூலம் வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக இந்த பாஸ்டேக் முறையை அமல்படுத்துவதற்காக கால அவகாசம் வாகன ஓட்டிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 15ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை கட்டாயம் எனவும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இருமடங்காக கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்புகள் வெளிவந்தது. அதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் பாஸ்டேக் நடைமுறையை பின்பற்றும் படி மத்திய சாலை போக்குவரத்து சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவாடிகள், பெட்ரோல் நிலையங்களிலிருந்து பாஸ்டேக் பேட்ஜ்ஜை பெறுவதற்கு நேற்று இரவு முதல் காத்திருக்கின்றனர். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பாஸ்டேக் பேட்ஜ்ஜை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த தானியங்கி கட்டண முறையை சரியான விதத்தில் பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here