பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:

கச்சா எண்ணையின் விலை ஏற்றம், இறக்குமதி செலவு மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருவர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று இந்தியாவில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமின்!!

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.91.19 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் டீசல் லிட்டருக்கு ரூ.84.44 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெளியாகியுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் ரூ.91.45 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து தற்போது லிட்டர் ரூ.84.77 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here