புதிய தொழிற்கொள்கை – தமிழக முதல்வர் இன்று வெளியீடு!!

0
Chennai: Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami addresses a press conference on water scarcity, in Chennai, Friday, June 21, 2019. (PTI Photo/R Senthil Kumar)(PTI6_21_2019_000326B)

தமிழகத்தில் அதிகமானோர் வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பல தொழில்கள் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஓர் தொழிற்கொள்கையை தயாரித்துள்ளது. இன்று தமிழக முதல்வர் அந்த புதிய தொழிற்கொள்கையை வெளியிடவுள்ளார்.

தொழிற்கொள்கை:

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்தனர். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அதிக தொழில் முதலீடு செய்வதற்காக தலைமை செயலர் தலைமையில் ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தமிழகத்தில் தொழில்கள் துவங்குவதற்கான புதிய தொழிற்கொள்கை திட்டத்தை வகுப்பார்கள் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த குழு புதிய தொழிற்கொள்கையை தயாரித்து விட்டது. இந்நிலையில் இந்த புதிய தொழிற்கொள்கைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடவுள்ளார். மேலும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையும் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்த 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஏழை மக்களுக்கு 5 ரூபாயில் உணவு திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!

இதன்மூலம் வேலை இல்லாமல் தவிக்கும் 75 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே 20 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்களில் தமிழக முதல்வர் இன்று உற்பத்தியை துவங்கி வைக்க உள்ளார். மேலும் மணப்பாறை, கும்மிடிப்பூண்டி, தருமபுரி, ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்காக்களை துவங்குவதற்கான அடிக்கல்லை முதல்வர் இன்று நாட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here