ஏழை மக்களுக்கு 5 ரூபாயில் உணவு திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!

0

மேற்கு வங்க மாநில முதலவர் மம்தா பானர்ஜி ஏழைகளுக்காக குறைந்த விலையில் உணவுகளை விற்பதற்கான திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் விரைவில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்:

தற்போது அனைத்து பகுதிகளிலும் ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் ஏழை மக்கள் மிக்க பயனடைந்து வருகின்றனர். ஏழை மக்கள் அன்றாடம் போராடும் உணவு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மேற்கு வங்க அரசு தற்போது ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி ஏழைகளுக்கு வெறும் 5 ரூபாயில் உணவு கிடைக்கும் வகையில் ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். தினமும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுய உதவிக்குழுவினர் சமையல் அறையை பராமரிப்பார்கள்.

#INDvsENG 2வது டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு!!

மேலும் விரைவில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் மம்தா இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here