#INDvsENG 2வது டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி தனது 3 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் முதலாவதாக தங்களது டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். இந்த இரு அணியின் 2வது டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் வைத்து நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்களை குவித்தார். அதன்பின்பு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணி தரப்பில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். பின்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி துவக்கியது. இதில் அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றம் தந்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

திணறும் இங்கிலாந்து:

முதல் இன்னிங்சில் பௌலிங்கிலும், இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். 2வது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 286 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு, இந்திய அணி 482 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின்பு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பர்ன்ஸ் 25, சிப்லே 3 மற்றும் லீச் 0 ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

‘கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்’ – ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்!!

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் களத்தில் லாரன்ஸ் மற்றும் ரூட் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 53/3

லாரன்ஸ் – 19*
ரூட் – 2*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here