‘கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்’ – ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்!!

0
Ajith Kumar
Ajith Kumar

தல அஜித் நடித்து கொண்டிருக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் பல பொது இடங்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நச்சரித்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

வலிமை:

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் பொது இடங்களில் கேட்டு வருகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மற்றும் தமிழக முதல்வரிடம் படத்தின் அப்டேட் குறித்து கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சமூக வலைத்தளங்களில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ரசிகர்களின் இந்த செய்கைக்கு தல அஜித் கூறியதாவது, என் மீதும் என் படங்கள் மீதும் அதிக அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை படத்தின் அப்டேடை கேட்டு வருகிறீர்கள்.

அதனை அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் கேட்டு வருவதால், அவர்களின் செயல் என்னை வருத்தமுற செய்கின்றது. முன்னர் அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வெளிவரும். அதற்கான காலம் மற்றும் நேரத்தை நானும், தயாரிப்பாளரும் இணைந்து முடிவு செய்வோம். அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு ஆனால் எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை.

சாம்சங் கேலக்சி F62 அறிமுகம் – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியம் மற்றும் கட்டுப்பாடை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here