சாம்சங் கேலக்சி F62 அறிமுகம் – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

0

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழ்வது சாம்சங். இந்த நிறுவனம் தற்போது தனது லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்சி F62 என்னும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது அதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங்:

ஸ்மார்ட்போன்களின் பல மாடல்களை தயார் செய்து பயனாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் நிறுவனமாக திகழ்கிறது சாம்சங் நிறுவனம். தற்போது இந்த நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான F62 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான சாம்சங் நிறுவனத்தின் F சீரிஸின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் தான் இந்த F 62 ஸ்மார்ட்போன். தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வரும் 22ம் தேதி அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்திய ஆன்லைன் ஸ்டார் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ரீடைலர் ஸ்டார் வழியாக வெளிவர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6.7 இன்ச் டிஸ்பிலேவை பெற்றுள்ளது. மேலும் இதன் ரேமை 8 ஜிபி வரை அதிகரித்துள்ளனர்.

விலை மற்றும் அம்சம்:

இதன் பின் கேமரா 64+12+5+5 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது. மேலும் இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்போன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் எஸ்டி கார்டை 1டீபி வரை செலுத்தும் வசதியை செய்துள்ளது.

விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் – போனிகபூர் அறிவுப்பு!!

இந்த போன் 7000mAh பேட்டரி வசதியை கொண்டது. மேலும் 25W பாஸ்ட் சார்ஜிங்கை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.23,999 ஆகும். மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.25,999 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here