சன் டிவியில் மீண்டும் நேரடியாக ரிலீஸ் ஆகும் சமுத்ரகனியின் திரைப்படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போதெல்லாம் சில படங்கள் நேரடியாக டிவியில் வெளியாகி வரும் நிலையில் சமுத்ரகனியின் புதிய படம் ஒன்று மறுபடியும் வெளியாகவுள்ளது.

வெள்ளை யானை

கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாக திரையரங்குகள் முழுமையாக இயங்காத காரணத்தால் சில மாதங்களாக தமிழ் திரை துறையில் பல்வேறு திரைப்படங்களை தனியார் தொலைக்காட்சி மற்றும் OTT தளங்களில் வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவான “ஏலே” எனும் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளை யானை” திரைப்படமும் தொலைக்காட்சியில் வெளியிட இருப்பதாக திரைதுறைவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இயக்குனராக தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் தனது இயக்குனர் பாதையை தொடங்கிய திரு.சுப்ரமணியம்சிவா அவரே சமுத்திரக்கனியின் “வெள்ளை யானை” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் திரு.சுப்ரமணியம்சிவா அவர்கள் மேலும் கோலிவுட்டியில் “பொறி”, யோகி, சீடன் போன்ற குடும்ப படங்களை இயக்கிய அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இடம்பிடித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இவர் சமுத்திரக்கனியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் வெள்ளை யானை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனுமதி இல்லாத காரணத்தால், தற்போது இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய இப்படக்குழு திட்டமிட்டுள்ளது.

களமிறங்கியுள்ள ஆண்ட்ராய்டு 12 பீட்டா 2… என்னென்ன சிறப்பம்சங்கள்!!!

இதன் முன்னேற்பாடாக முன்னணி தொலைக்காட்சி ஒன்றுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here