வாட்சிலும் 2 கேமரா… பேஸ்புக் நிறுவனத்தின் அட்டாகாசமான ஸ்மார்ட் வாட்ச்!!!

0

பேஸ்புக் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் வாட்சை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாட்ச் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வர உள்ளதாகவும் தகவல்களை தெரிவித்து உள்ளது .மேலும் இந்த வாட்ச் செல்லுலார் இணைப்புடன் கூடிய புதுமையான வடிவமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் செல்லுலார் இணைப்பையும், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட  ஆண்ட்ராய்டின் திறந்த மூல பதிப்பை இயக்கும் என்றும், இது மிகவும் பிரபலமான உடற்பயிற்சி தொடர்பான சேவைகளுடன் ஒருங்கிணைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தைய  அறிக்கை படி பேஸ்புக் ஸ்மார்ட்வாட்சில் உள்ள  வன்பொருள் பற்றிய சில விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, வரவிருக்கும் பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும், இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் வசதிகளுக்கான தனியாக உள்ளன. மேலும் இதில்   இரண்டு கேமராக்களும் இடம்பெற்றுள்ளன. புகைப்படங்கள் / வீடியோக்களை எடுக்க  பின்புறத்தில் 1080p ஆட்டோ-ஃபோகஸ் யூனிட் மற்றும் வீடியோவிற்கு  முன்பக்கத்தில் ஒரு அடிப்படை கேமரா. மேலும் பல வசதிகளை இணைக்க  பேஸ்புக் நிறுவனம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த  திட்டமிட்டுள்ளது. இந்த வாட்சை  அடுத்த அடுத்த ஆண்டு பேஸ்புக் நிறுவனம்  அறிமுகப்படுத்த கூடும் என்றும், இதன் விலை சுமார் 400 டாலர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here