வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு – போக்குவரத்து காவல்துறை

0

சாலையில் வாகனங்கள் வேகமாக இயங்குவதை குறைக்கவும் விபத்துகளை தவிர்க்கவும் டெல்லி காவல்துறையினர் பெரும்பாலான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

போக்குவரத்து காவல்துறை:

நாடு முழுக்க வாகனம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. இதனால் சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும்,அதிகரித்துகொண்டே வருகிறது. சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லுவதால் மட்டுமே விபத்துகளை குறைக்கமுடியும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் சாலைகள் வெறுமையாக காணப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் சாலையில் உலாவ துவங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனங்களுக்கு அதாவது மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு, டெல்லி காவல்துறையினர் மணிக்கு 50-60 கிமீ வேகம் நிர்ணயித்துள்ளனர். குடியிருப்பு பகுதி மற்றும் குறுகிய சாலைகளுக்கு 30கிமீ வேக வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் கார்கள், டெலிவரி வேன்கள் போன்றவற்றிற்கான வேக வரம்பு பெரும்பாலான சாலைகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாகனம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேக வரம்பில் 5% ஐத் தாண்டினால், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 183 வது பிரிவின் கீழ் டெல்லி காவல்துறையினர் குற்றத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here