களமிறங்கியுள்ள ஆண்ட்ராய்டு 12 பீட்டா 2… என்னென்ன சிறப்பம்சங்கள்!!!

0

கூகுள் சென்ற மாதம் ஆண்ட்ராய்டு 12  இன் முதல் பிட்டாவை வெளியிட்டது. தற்போது இரண்டாவது சோதனை பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல தனித்துவமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக ஆண்ட்ராய்டு 7 முதல் 9 வரையிலான வெர்ஷன்களை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது. பின் செப்டம்பர் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வெளியானது. அந்த வரிசையில் இந்த ஆண்ட்ராய்டு 12 வெளியிடப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 12  இன் இரண்டாவது பிட்டாவின் சோதனை பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 12 பீட்டா 2 செயல்தளத்தில் Wifi பொத்தான் இன்டர்நெட் பொத்தானுடன் மாறி இருப்பது இதன் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். அதை கிளிக் செய்வதன் மூலம் Wifi இணைப்பை செயல்படுத்தலாம் அல்லது மொபைல் டேட்டாவை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த புதிய தளத்தில் Privacy Control Panel இல், எந்தெந்த செயலிகள் தனிப்பட்ட தகவலை பயன்படுத்துகின்றன, எப்படி பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்க User Friendly Interface வழங்கப்பட்டுள்ளது. iOS 14 போன்று ஆண்ட்ராய்டு 12 இல், மைக்ரோ போன் மற்றும் கேமரா செயல்பட்டு குறிக்கட்டிகள் செயலிகள் செயல்படுத்தும்போது காண்பிக்கப்படும். மேலும் கிளிப்போர்டை அணுகுவதற்கு செயலிகள் கோரிக்கைகள் குறித்தும் பயனர்களுக்கு தெரிவிக்கும்.

இதோடு மட்டும்மின்றி ஆண்ட்ராய்டு 12 உடன் சேர்த்து பல புதிய கருவிகளையும் (Tools) டெவலப்பர்கள் பெறுவார்கள். மேலும் ஆண்ட்ராய்டு 12 செயல்தளம், பல்வேறு சாதனங்களுக்கு இடையில் பகிர்தலை எளிதாகும் என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here