தக்காளியே இல்லாத சூப்பரான சாம்பார்.., ஒரு தடவை ட்ரை பண்ணுங்க.., வீடே மணக்கும்!!

0
தக்காளியே இல்லாத சூப்பரான சாம்பார்.., ஒரு தடவை ட்ரை பண்ணுங்க.., வீடே மணக்கும்!!
தக்காளியே இல்லாத சூப்பரான சாம்பார்.., ஒரு தடவை ட்ரை பண்ணுங்க.., வீடே மணக்கும்!!

பொதுவாக நாம் சாம்பார் வைத்தால் அதன் சுவையை தூக்கி கொடுக்க தக்காளி சேர்ப்பது வழக்கம். ஆனால் இப்போது தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் அதை வாங்க முடியாமல் சாமானிய மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் தக்காளி இல்லாமல் ஆனால் அதே சுவையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • துவரம் பருப்பு – 250 கிராம்
  • சின்ன வெங்காயம் – 5
  • கடுகு – சிறிதளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உருளைக்கிழங்கு – 2
  • பெருங்காயம் – 1/ 2 டீஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் – 4
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

இந்த சாம்பார் தயாரிப்பதற்கு குக்கரில் பருப்பை கழுவி போட்டு அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு, பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு.., இனி இந்த அருவிகளில் குளிக்க தடை..,வெளியான அறிவிப்பு!!!

இப்போது ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி அதோடு கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு இதில் வேக வைத்துள்ள பருப்பை இதோடு சேர்த்து கொள்ளவும். மேலும் நாம் இதில் தக்காளி சேர்க்க வில்லை என்பதால் நெல்லிக்காய் அளவில் புளியை கரைத்து ஊற்றி கொள்ளவும். இதன் பிறகு இதை ஒரு 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான சாம்பார் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here