நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் – இணையத்தில் ட்ரெண்டிங்!!

0

பிரபலமான மற்றும் முன்னணி நடிகையான சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது அனைவர் மத்தியிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

சமந்தா அக்கினேனி 

தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு பின்பு கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அதே சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான், சமந்தா. ஆரம்பத்தில், மிகவும் சிறிய கதாபாத்திரம் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் தான், சமந்தா.

#INDvsENG 2வது டெஸ்ட் – டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்! கில் ஏமாற்றம்!!

தமிழில் முதன் முதலாக “மாஸ்க்கோவின் காதலி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பேசப்படவில்லை. இதன் பிறகு, கவுதம் மேனன் இயக்கத்தில் “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார்.

பின்பு, அதே திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு பின்பு பல வெற்றி படங்களில் சமந்தா நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு கூட இவர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த பொது முடக்கத்தின் போது சமந்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். தற்போதும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here