தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – இன்று தொடக்கம்!!

0

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழகத்தில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்க அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மதுரையில் வைத்து துவக்கி வைத்தார். மேலும் தடுப்பூசிகளை 2 முறை செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 26 நாட்களில் தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தமாக 15,856 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதில் 3,137 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் மற்றும் 10,210 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் மட்டும் இதுவரை 13,191 தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அதற்காக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை – கவலையில் வாகன ஓட்டிகள்!!

தற்போது இன்று முதல் தமிழகத்தில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்த முறையும் முதலாவதாக ராஜீவகாந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் முதல் நபராக தடுப்பூசியை போட்டுக்கொண்டார். கடந்த 16ம் தேதி தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தற்போது 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. இதற்கு 166 மையங்களில் 3,027 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் 99 பேருக்கு கோவாக்சின் என மொத்தம் 3,126 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here