இந்தியாவில் பல மாநிலங்களில் நில அதிர்வு – பீதியில் மக்கள்!!

0

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படப்போவதாக உணரப்பட்டுள்ளது. மேலும் ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

நிலநடுக்கம்:

தற்போது தான் நாம் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறோம். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் முதல் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கடுமையான மழை . தற்போது நிலநடுக்கம் வரப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர். அதன்படி தஜகிஸ்தானில் உள்ள முர்காப் என்ற இடத்தை மையமாக கொண்டு பூமிக்கடியில் சுமார் 92 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியது. அங்குள்ள மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய தகவல் வெளியாகவில்லை. தற்போது ஆசிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலும் நிலநடுக்கம் வரப்போவதாக உணரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – இன்று தொடக்கம்!!

இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றனர். இதனை தொடர்ந்து டெல்லி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு டெல்லி முதலமைச்சர் மக்களை கேட்டு கொண்டார். மேலும் பஞ்சாபில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here