‘இனி வீட்டின் முன்பு காரை நிறுத்தினால் கட்டணம்’ – பெங்களூரில் புதிய பார்க்கிங் கொள்கை!!

0

பெங்களூரு பகுதியில் தற்போது புதிய கார் பார்க்கிங் கொள்கை அமல்படுத்தபட உள்ளது. இதனை முன்னிட்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

மிக பரபரப்பாக இருக்கும் நகரம் தான் பெங்களூரு. அங்கு பல சாப்ட்வேர் மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளன. தனது பணிக்கு செல்லும் பணியாளர்கள் காலை நேரத்தில் ரோட்டில் டிராபிக்கில் சிக்கி தவித்து வருகிறார்கள். தற்போது இதனை தடுக்கும் வகையில் பல திட்டங்களை அரசு அமல் படுத்தி வருகிறது. மேலும் தெருக்களில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் தற்போது கட்டணத்தை விதித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய கார் பார்க்கிங் கொள்கை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஒருவரின் பெயரில் ஒரு கார் மட்டுமே தனது வீட்டின் முன்பு நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை இடையூறுகளை தடுக்க முடியும். ஒரு வாகனத்திற்கு மேல் நிறுத்துபவர்க்கு இனி கட்டணம் விதிக்கப்பட்டும். அதன்படி நடுத்தர வாகனங்களுக்கு தலா ரூ.4,000 விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய கார்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் வரும் பிரதமர் மோடி – ரூ.3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!!

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதற்கு இனி இடையூறு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பார்க்கிங் கொள்கை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக சில பகுதிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here