‘ஆண்ட்ரியாவை பாத்து கத்துக்கோங்க’ – ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் ரசிகர்கள்!!

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும், புகழும் உள்ளது. தற்போது வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஐஸ்வர்யா அந்த புகைப்படத்தை சமூகவலைதங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் தனது திறமையாலும், அசாத்திய நடிப்பாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல கலரான நாயகிகள் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற வழக்கத்தையே மாற்றி எழுதியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில நடன போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார். தமிழில் வெளியான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்த அவரது கதாப்பாத்திரம் அவருக்கு நல்ல பெயரையும், விருதுகளையும் வாங்கித்தந்தது.

தொடர்ந்து நடிகர் தனுசுடன் ‘வட சென்னை’ மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுடன் சில படங்களில் நடித்துள்ளார் இவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலிலும் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் ‘கனா’ என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனை கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் வரும் பிரதமர் மோடி – ரூ.3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!!

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வில்வித்தை கற்பது போன்ற புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் ‘ஆண்ட்ரியாவை பாத்து கத்துக்கோங்க’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள். ஏனென்றால் நடிகை ஆண்ட்ரியா ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு வில்வித்தை காட்சியில் நடித்திருப்பார். ஆனால் அந்த படத்திற்கு அது தேவை இல்லாத காட்சி என இணையதளத்தில் கருத்துக்கள் நிலவி வருகிறது. அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here