புரட்டாசி மாத ஸ்பெஷல் – ஈஸியா செய்யலாம் சுவையான சைவ ஈரல் கிரேவி!!

0
புரட்டாசி மாத ஸ்பெஷல் - ஈஸியா செய்யலாம் சுவையான சைவ ஈரல் கிரேவி!!
புரட்டாசி மாத ஸ்பெஷல் - ஈஸியா செய்யலாம் சுவையான சைவ ஈரல் கிரேவி!!

புரட்டாசி மாதம் என்பதால் நம்மில் பலரது வீட்டில் அசைவ உணவுகளை எடுக்க முடியாது. எனவே வெறும் பாசிப்பயரை வைத்து அசைவ உணவு சுவையில் சைவ ஈரல் கிரேவி எப்படி செய்வது என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.

பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து – உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!

தேவையான பொருட்கள்

ஊற வைத்த பச்சை பயறு – 1/2 கப்

பச்சை மிளகாய் – 1

பட்டை – 1

கிராம்பு – 2

சின்ன வெங்காயம் – 4

தக்காளி – 2

சோம்பு – 1/2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மட்டன் மசாலா – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

உப்பு – தே.அளவு

கருவேப்பிலை – தே.அளவு

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஊறவைத்த பச்சை பயறை பச்சை மிளகாய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவேண்டும். பின்னர் இட்லி தட்டில் அரைத்த கலவையை 15 நிமிடங்கள் வேகவைக்கவேண்டும். பின்னர் ஆறவிட்டு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

புரட்டாசி மாத ஸ்பெஷல் - ஈஸியா செய்யலாம் சுவையான சைவ ஈரல் கிரேவி!!

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்த உடன் இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும்.

புரட்டாசி மாத ஸ்பெஷல் - ஈஸியா செய்யலாம் சுவையான சைவ ஈரல் கிரேவி!!

பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நாம் வேகவைத்து வெட்டி எடுத்துள்ள பயறு கலவையை அதில் சேர்த்து கிளறிவிடவும். தற்போது அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும். தற்போது சூடான சுவையான சைவ ஈரல் கிரேவி ரெடி.

குறிப்பு: இந்த சைவ ஈரல் கிரேவியை சாதத்திற்கு அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடும் பொழுது மிக சுவையாக இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here