Sunday, May 5, 2024

சபரிமலை தரிசன முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது – தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!!

Must Read

சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யும் பக்தர்கள் கம்ப்யூட்டர் மையங்களில் 3 ஆயிரம் முதல் கட்டணம் செலுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து சபரிமலை தேவஸ்தானம் சார்பில் அவ்வாறாக பக்தர்கள் பணத்தை கொடுக்க வேண்டாம் என்றும், முன்பதிவுகளுக்கு பணம் வசூலிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அரசு கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதி அளித்தது. கார்த்திகை மாதம் ஆரம்பிக்கவுள்ளதால் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேவஸ்தானம் சார்பில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக பக்தர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருத்தல் அவசியம் என்று கூறப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஜனவரி 18 ஆம் தேதி வரை 86 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதே போல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்று மருத்துவ சான்றிதழும் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள். இந்த நிலையில் முன்பதிவு செய்வதற்காக சில கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் சில முன்பதிவு செய்யும் இடங்களில் பக்கதர்களிடம் இருந்து 3000 முதல் 5000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் தேவஸ்தானத்திற்கு கிடைத்தது.

பக்தர்கள் ஏமாற வேண்டாம்:

இதனை அடுத்து சபரிமலை தேவஸ்தான தலைவர் வாசு செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கொரோனா பரவல் காரணமாக தேவஸ்தானம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருத்தல் அவசியம். அதே போல் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழையும் கொண்டு வர வேண்டும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் அவர்களுக்கு குறைந்த விலையான 625 ரூபாயில் கொரோனா பரிசோதனை நிலக்கல்லில் செய்யப்படுகிறது. அதே போல் முன்பதிவிற்காக பகதர்கள் சில கம்ப்யூட்டர் மையங்களில் 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி உள்ளதாக தெரிகிறது. தேவஸ்தானம் சார்பில் முன்பதிவிற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -