Thursday, May 2, 2024

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம் – தேர்வு இயக்குனர் தகவல்!!

Must Read

தேசிய அளவு தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம் என்று நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இயக்குனர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளோம். இதன் மூலமாக பல பாதிப்புகளையும் நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக கல்வி துறையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தேசிய அளவு தேர்வுகள் என்று கருதப்படும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

neet exam hall
neet exam hall

இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பி வழக்கு ஒன்றையும் தொடுத்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் தேர்வு தேதிகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

நுழைவு சீட்டு வெளியீடு:

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தும் ஆணையம் இன்று தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்கபடும் என்று தெரிவித்து இருந்தது. அதே போல் இன்று அதனை வெளியிட்டது, வெளியிட்ட 4 மணி நேரத்தில், 4 லட்சம் மாணவர்கள் தங்கள் நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒரு நொடிக்கு 178 டெராபைட்ஸ் – அதிவேக இணையவசதியை கண்டுபிடித்து அசத்தல்!!

neet and jee admit card 2020
neet and jee admit card 2020

இந்த தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்:

இந்த தேர்வினை நடத்த பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இயக்குனர் வினீத் ஜோஷி கூறியுள்ளார், அவர் கூறியதாவது,

  • மாணவர்கள் தங்கள் நுழைவு சீட்டினை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் தங்கள் நியமன கடிதத்தை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.
  • சமூக இடைவெளியை கடைபிடிக்க மாணவர்களுக்கு தனி தனி நேரங்கள் கூறப்பட்டுள்ளது. இதன் முலமாக ஒரே நேரத்தில் அனைவரும் வந்து கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.
  • கடந்த ஆண்டுகளில் ஒரு தேர்வு கூடத்தில் 24 மாணவர்கள் அமர்த்தப்படுவர். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு தேர்வு கூடங்களில் 12 மாணவர்கள் தான் அமர்த்தப்படுவர்.

இது போன்ற நடவடிக்கைள் மூலமாக கொரோனா தொற்று தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு மையங்கள் இந்த இரு தேர்வுகளுக்கும் அதிகரித்துள்ளது. ஜே.இ.இ தேர்வுக்கு கடந்த ஆண்டு 560 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு அது 660 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் நீட் தேர்வுகளுக்கு கடந்த ஆண்டு 2,546 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு 3,843 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.” என்று வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது இப்படியாக இருக்க வடமாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் இந்த இரு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர். இதனால், பல எதிர்ப்புகளுடன் இந்த தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -