உருளைக்கிழங்கு 65 – ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க!!

0
Aloo-65
Aloo-65

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. அந்த உருளைக்கிழங்கில் நாம் பல ஸ்னாக்ஸ் வகைகளை செய்யலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கு 65 எப்படி செய்வது என்று பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

potto 65 recipes
potto 65 recipes
  • உருளைக்கிழங்கு – 4
  • மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது,
  • சோம்பு
  • சோளமாவு ஒரு தேக்கரண்டி
  • மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை

முதலில் உருளை கிழங்கை தோல் உரித்து சதுர சதுரமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனை ஒரு தண்ணீரில் 3 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.அதனை வடிகட்டி ஈரப்பதம் போகும்வரை காயவைக்கவும். அதனை பௌலில் வைத்து உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, இஞ்சிபூண்டு விழுது சோளமாவு சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டவும்.

aloo 65
aloo 65

சதுர துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். அதன்பின் அதனை 20 நிமிடங்கள் ஊறவைத்து வாணலியில் எண்ணையை சூடாக்கி பொரித்து எடுத்தால் உருளைக்கிழங்கு 65 தயார். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here